15 ஆண்டுக்கு பிறகு குன்னூர்-ஊட்டி இடையே நீராவி இஞ்ஜின் சோதனை ஓட்டம்

குன்னூர்: குன்னூரில் நூற்றாண்டு பழமையான நீராவி இஞ்ஜின் உள்ளது. இந்த இஞ்ஜின் பல்சக்கரம் மூலம்   குன்னூர் முதல் மேட்டுப்பாளையம் வரை இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் குன்னூரிலிருந்து ஊட்டி வரை டீசல் இஞ்ஜின் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. 15 ஆண்டுக்கு பிறகு மீண்டும் நீராவி இஞ்ஜின் குன்னூர் முதல் ஊட்டி வரை நேற்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில் குன்னூர் முதல் ஊட்டி வரை இயக்க நேரம் மற்றும் எரிபொருள் குறித்து கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் வந்ததால் பாரம்பரியம் மாறாமல் உள்ள இந்த இஞ்ஜினை குன்னூர் முதல் ஊட்டி வரை தினந்தோறும் இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Coonoor-Ooty ,Coonoor ,Ooty , Coonoor, Ooty
× RELATED குன்னூர்-ஊட்டி சாலையில் பேருந்து படியில் தொங்கியபடி மாணவர்கள் பயணம்