×

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்: விக்கிரவாண்டியில் அதிமுக வெற்றி உறுதி...நாங்குநேரியில் முன்னிலை

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில்  அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி,  விக்கிரவாண்டி தொகுதிகளில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது.  விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் நா.புகழேந்தி, அதிமுக சார்பில் முத்தமிழ்செல்வன்,  நாம் தமிழர் கட்சி  சார்பில் கந்தசாமி உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்டனர்.

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், அதிமுக சார்பில் நாராயணன்,  நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜநாராயணன் உள்ளிட்ட 23 பேர் களத்தில் உள்ளனர்.  விக்கிரவாண்டி தொகுதியில் 81.41 சதவீத வாக்குகளும், நாங்குநேரி தொகுதியில் 66.35 சதவீதம்  வாக்குகளும் பதிவாகின.
தேர்தலில், பதிவான வாக்குகள் காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள்  எண்ணப்பட்டன. தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்களில் பதிவான வாக்குகள்  எண்ணப்பட்டு வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல்,  விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில்  அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதி  அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனின் வெற்றி உறுதியாகியுள்ளது. இன்னும் 35,489 வாக்குகள் எண்ணப்படவுள்ள நிலையில், திமுக வேட்பாளர் புகழேந்தியை விட அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 37,661 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். எனவே, அதிமுக வேட்பாளர் வெற்றி உறுதியாகியுள்ளது.

தற்போதைய நிலவரம்:

விக்கிரவாண்டி தொகுதி: அதிமுக வெற்றி உறுதி:

அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன்: 1,03,697 வாக்குகள் (40,547 வாக்குகள் வித்தியாசம்)
திமுக வேட்பாளர் நா.புகழேந்தி: 63,150 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி: 2,712 வாக்குகள்

நாங்குநேரி தொகுதி: அதிமுக முன்னிலை


அதிமுக வேட்பாளர் நாராயணன்: 52.155 வாக்குகள் (16, 449 வாக்குகள் வித்தியாசம்)
காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன்: 35.706 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன்: 1,124 வாக்குகள்



Tags : Vikravandi ,Tamil Nadu Assembly Elections ,AIADMK ,victory , Tamil Nadu Assembly Elections: AIADMK's victory in Vikravandi ...
× RELATED திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு...