×

தென்காசி, வீரவநல்லூர் கோயில்களில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்

தென்காசி: தென்காசி, வீரவநல்லூர் கோயில்களில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் காலை, மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் இரவில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா, மாலையில் ஆன்மீக சொற்பொழிவு நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான உலகம்மன் தேரோட்டம், நேற்று காலை நடந்தது. ரதவீதிகள் வழியாக தேர் வலம்வந்து நிலையை அடைந்தது. முன்னதாக சுவாமி, அம் பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பூஜைகளை பட்டர்கள் செந்தில், முத்துக்கிருஷ்ணன், கைலாசம் ஆகியோர் நடத்தினர்.

இதில் கோயில் செயல்அலுவலர் யக்ஞநாராயணன், கணக்கர் பாலு, மணியம் செந்தில்குமார், அன்னையாபாண்டியன், அதிமுக நகர செயலாளர் சுடலை, மாவட்ட பிரதிநிதி மாரிமுத்து, சுப்புராஜ், பூக்கடை சரவணன், சுந்தரம், ராமகிருஷ்ணன், சங்கர், பாஜ நகர தலைவர் திருநாவுக்கரசு, முத்துக்குமார், சங்கரசுப்பிரமணியன், கருப்பசாமி, ராஜ்குமார், மந்திரமூர்த்தி, குத்தாலிங்கம், அருணாசலம், மகேஸ்வரன், அமமுக நகர செயலாளர் துப்பாக்கிபாண்டியன், இந்து முன்னணி நகர தலைவர் இசக்கிமுத்து, லட்சுமிநாராயணன், காங்கிரஸ் மாடசாமிஜோதிடர், சபரிமுருகேசன், சுப்பிரணியன், ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் ராஜாராம், தேனாண்டாள் நாச்சியப்பன், அபிநயா கண்ணன், நாராயணன் ஜோதிடர், ராஜேஸ்வரன், ஆறுமுகம் உட்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஆடிவேல், எஸ்ஐ மாதவன், ஞானரூபி பரிமளா தலைமையிலான போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் செய்திருந்தனர். விழாவில் நாளை (25ம் தேதி) காலை 8.20 மணிக்கு மேல் யானைப்பாலம் தீர்த்தவாரி மண்டபத்திற்கு அம்பாள் எழுந்தருளல், மாலை 5 மணிக்கு மேல் தெற்குமாசி வீதியில் காசிவிஸ்வநாதர் உலகம்மனுக்கு தபசுக்காட்சி கொடுத்தல், இரவு 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை நெல்லை இணை ஆணையர் பரஞ்ஜோதி, தக்கார் சங்கர், செயல் அலுவலர் யக்ஞநாராயணன் மற்றும் கட்டளைதாரர்கள், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

வீரவநல்லூர்: பிரசித்திப் பெற்ற வீரவநல்லூர்   பூமிநாதர் சமேத மரகதாம்பிகை கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அம்பாள் தேரில் எழுந்தருளி காட்சியளித்தார். தொடர்ந்து பக்தர்கள் வடம்பிடிக்க, தேர் ரதவீதிகளை சுற்றி வந்து மீண்டும் நிலையை அடைந்தது. திருவிழாவில் இன்று திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

Tags : Ipasi Tirukkalyana ,festival ,Tenkasi , Festival
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...