×

பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் போராட்டம் அறிவிப்பு: ராஜினாமா செய்ய முடியாது என இம்ரான் கான் பதில்

கராச்சி: பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் போராட்டம் அறிவித்திருக்கும் நிலையில் ராஜினாமா செய்ய முடியாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் எதிர்க்கட்சியான ஜாமியத் உலிமா இஸ்லாம் பாஸில் கட்சி பிரதமர் இம்ரான் கான் பதவி விலகக் கோரி ’ஆசாதி மார்ச்’ போராட்டத்தை இம்மாத இறுதியில் நடத்த இருக்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடர்பாக இம்ரான் கான் மூத்த பத்திரிகையாளர்களுக்குப் பதில் அளித்துள்ளார்.

இம்ரான் கான் கூறுகையில், ராஜினாமா குறித்த கேள்விக்கே இடமில்லை. நான் ராஜினாமா செய்ய முடியாது. எதிர்க்கட்சிகளின் பிரச்சினை என்னவென்று எனக்குப் புரியவில்லை என்றார். முன்னதாக ஜாமியத் உலிமா இஸ்லாம் பாஸில் கட்சியின் தலைவர் ஃபஸ்லர் ரஹ்மான், போலியான தேர்தலின் மூலம் இம்ரான் கானின் அரசு ஆட்சிக்கு வந்தது என்றும் அதனைக் கவிழ்க்க ’ஆசாதி மார்ச் ’ போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்காத வகையில் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி எதிர்க்கட்சிகள் போராட்டத்தை நடத்த பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது. பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானின் கடன் சுமை 6 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 30 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இம்ரான் கான் அரசை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கடந்த சில மாதங்களகவே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

Tags : Opposition ,Pakistan ,resignation ,parties , Pakistan, Opposition, Struggle, Resignation, Can't, Imran Khan, Answer
× RELATED தேர்தல் ஆதாயத்திற்காக வெறுப்பாக பேசுவதா? பாகிஸ்தான் கண்டனம்