×

புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி இடைத்தேர்தல்: 7,171 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றுள்ளார்.  புதுச்சேரியில் காலியாக உள்ள காமராஜ்நகர் தொகுதிக்கு கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. புதுச்சேரி காமராஜ்நகர்  தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரன், நாம் தமிழர் கட்சி சார்பில் பிரவீனா உள்ளிட்ட 9 பேர்  களத்தில் உள்ளனர். தேர்தலில், புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் 69.44 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.

இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல், காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் முன்னிலை வகித்தார். இந்நிலையில், 7,171 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 14,782 வாக்குகள் பெற்றுள்ளார்.

 மேலும், அவரை எதிர்த்து போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் 7,612 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரவீனா 620 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனையடுத்து, காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Jankumar ,Puducherry ,Puducherry Kamarajnagar ,Congress , Puducherry Kamarajnagar by-election: Congress candidate Jankumar wins by 7,171 votes
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி...