×

நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: 9 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியும்

சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகத்தில்  காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தலுக்கான  வாக்குப்பதிவு நடந்தது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் நா.புகழேந்தி, அதிமுக சார்பில் முத்தமிழ்செல்வன், நாம் தமிழர் கட்சி  சார்பில்  கந்தசாமி உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்டனர். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், அதிமுக சார்பில் நாராயணன், நாம்  தமிழர் கட்சி சார்பில் ராஜநாராயணன் உள்ளிட்ட 23 பேர் களத்தில் உள்ளனர். புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார்,  என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரன், நாம் தமிழர் கட்சி சார்பில் பிரவீனா உள்ளிட்ட 9 பேர் களத்தில் உள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் 81.41 சதவீத வாக்குகளும், நாங்குநேரி தொகுதியில் 66.35 சதவீதம் வாக்குகளும், புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில்  69.44 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. இந்த முன்று தொகுதிகளில் பதிவான வாக்குகள் (மின்னணு வாக்கு இயந்திரங்கள்) பாதுகாப்பாக  வைக்கப்பட்டுள்ளன. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி, காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இரு தொகுதிகளிலும் மொத்தம் 14 மேஜைகளில் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 9 மணிக்கு மேல் முன்னணி நிலவரம் தெரியவரும். வாக்கு எண்ணிக்கை  தொடங்கியதையடுத்து, கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : constituency ,Vikravandi ,Nankuneri ,Puducherry Voting ,Puducherry ,Kamrajnagar , Voting begins in Kamrajnagar constituency in Nanguneri, Vikravandi, Puducherry
× RELATED திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு...