×

கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் வெளியில் நிறுத்தப்பட்ட மாணவிக்கு காங். நிர்வாகி உதவி

சென்னை:  கல்வி கட்டணம் செலுத்தாததால் பள்ளிக்கு வெளியில் நிற்க வைக்கப்பட்ட மாணவிக்கு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம் பாஷா கட்டணத்தை செலுத்தி உதவியுள்ளார். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியனூர் பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளியில் காயத்ரி என்ற மாணவி 10ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளதால் அந்த மாணவியால் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்துள்ளார். கல்வி கட்டணம் செலுத்தாததால் மாணவி காயத்ரியை பள்ளி நிர்வாகம் வெளியில் நிற்குமாறு கூறியதாக தெரிகிறது. காலை முதல் மாலை வரை வெளியில் நின்ற மாணவி காயத்ரி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவி காயத்ரியை, தமிழக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம் பாஷா நேரில் சந்தித்தார். அவரது உடல்நிலையை விசாரித்த அவர் மாணவியின் கல்வி கட்டணத்தை செலுத்துவதற்காக ரூ.30ஆயிரத்துக்கான காசோலையை அந்த மாணவியிடம் வழங்கினார். அந்த மாணவியின் குடும்பத்தினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : student ,Kang , Tuition, student, congress
× RELATED பெற்றோர்களுக்கும்...