×

நுணுக்க வேலைப்பாடுகளுடன் டைட்டன் நெபுலா 18 கேரட் தங்க வாட்ச்கள் அறிமுகம்: சிறப்பு தள்ளுபடி உண்டு

சென்னை: டைட்டனின் நெபுலா நிறுவனம், 18 கேரட் தங்கத்தில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன், அழகிய கை கடிகாரங்களை அறிமுகம் செய்துள்ளது. டைட்டன் நிறுவனத்தின் நெபுலா சார்பில் நகாஷி கலெக்‌ஷன் என்ற பெயரில் அழகிய 5 தங்க கைக்கடிகாரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கோயில்களில் உள்ள கலை அம்சங்களான டோம்கள், தூண்கள், சித்திர வேலைப்பாடுகள், சக்கர வடிவமைப்புகள் என பழங்கால அரிய கலை நுட்பங்களை பிரதிபலிக்கும் வகையில் அற்புதமான வடிவங்களில் இந்த கைக்கடிகாரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தற்போது உள்ள கடிகாரங்களை விட மிக அழகானதாகவும், வைரங்கள் பொருத்தியதாகவும் உள்ளன. ஆன்யா, ஆத்யா, அக்‌ஷரா, அதுல்யா, ஏஷனா என ஐந்து கடிகாரங்களுக்கும் அதன் தன்னிகரற்ற சிறப்பை குறிக்கும் வகையில் பழமையான கலை நுட்பம் மற்றும் பெருமையை பறை சாற்றும் வகையி–்ல் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

 விழாக்காலத்துக்கு பெருமையும் சிறப்பும் சேர்க்கும் இந்த கடிகாரங்களில் நகாஷி கலெக்‌ஷன்கள் 2.3 லட்சம் முதல் கிடைக்கின்றன. இதுபோல் பிற நெபுலா வாட்ச் ரகங்கள் ₹29,000 முதல் கிடைக்கின்றன. முத்து, வைரம் உள்ளிட்ட நவரத்தின ராசிக்கற்கள் பொருத்திய கடிகாரங்களும் உள்ளன. தீபாவளியை முன்னிட்டு குறுகியகால சலுகையாக 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. வேர்ல்ட் ஆப் டைட்டான் ஸ்டோர்கள், ஹீலியாஸ், ஷாப்பர்ஸ் ஸ்டாப் மற்றும் titan.co.in இணையதளத்திலும், பிற அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமும் நெபுலா வாட்ச்கள் கிடைக்கும் என டைட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : Titan, Nebula 18 Carrot, Gold Watches
× RELATED அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு