×

சில்லி பாயின்ட்...

* பிரெஞ்ச் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-15, 7-21, 14-21 என்ற செட் கணக்கில் சீன தைபே வீரர் சோவ் டியன் சென்னிடம் போராடி தோற்றார். இப்போட்டி 55 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் பாருபள்ளி காஷ்யப் 11-21, 9-21 என்ற நேர் செட்களில் ஹாங்காங் வீரர் லாங் ஆங்குஸ் வசம் தோல்வியைத் தழுவினார்.
* வங்கதேச அணியுடன் டி20 தொடரில் மோதவுள்ள இந்திய அணி வீரர்கள் தேர்வு இன்று நடைபெறுகிறது. கேப்டன் விராத் கோஹ்லிக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் இளம் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட்டுக்கு மேலும் வாய்ப்புகள் அளிக்கப்படலாம். அறுவைசிகிச்சை செய்து கொண்டு ஓய்வெடுத்து வரும் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக வேறு ஆல் ரவுண்டரை தேர்வு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
* சீனாவின் வுஹான் நகரில் நடைபெறும் உலக ராணுவ விளையாட்டு போட்டித் தொடரில் இந்திய மாற்றுத்திறனாளி வீரர் ஆனந்தன் குணசேகரன் ஆண்கள் 100 மீட்டர் ஐடி1 பிரிவிலும், ஆண்கள் 400 மீட்டர் ஐடி1 பிரிவிலும் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். ஆண்கள் குண்டுஎறிதல் ஐடி1 பிரிவில் அனீஷ் குமார் சுரேந்திரன் பிள்ளை 12.76 மீட்டர் தூரம் எறிந்து இந்தியாவுக்கு 3வது தங்கப் பதக்கத்தை வென்றார்.


Tags : Chili Point ... ICC T20 World Cup , ICC T20 World Cup Series
× RELATED காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து...