×

6 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த குரூப் 2 மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு

* நவ.6ம் தேதி நேர்முகத்தேர்வு தொடக்கம் * டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை:  6 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த குரூப் 2 மெயின் தேர்வு ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நேர்முகத்தேர்வு நவ.6ம் தேதி தொடங்குகிறது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 பதவியில் அடங்கிய 23 துறைகளில் காலியாக உள்ள 1338  காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான முதல் நிலை தேர்வு நடந்தது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு  மெயின் தேர்வு அறிவிக்கப்பட்டது.  இந்த மெயின் தேர்வுக்கான ரிசல்ட் நேற்று மாலை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் கூறியதாவது:குரூப் 2ல் அடங்கிய பதவிக்கு மெயின் தேர்வு நடத்தப்பட்ட 8 மாத காலத்துக்குள் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. எழுத்து தேர்வில் விண்ணப்பதாரர் ெபற்ற மதிப்பெண் இட ஒதுக்கீடு விதி மற்றும் அப்பதவிகளுக்கு அறிவிக்கையில்  வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் மூலச்சான்றுகள் சரிபார்ப்பு மற்றும் நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக 2667 பேர் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான மூலச்சான்று சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு வருகிற 6ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது:குரூப் 2 தேர்வு மூன்று நிலைகளை கொண்டது. முதல்நிலை தேர்வு கடந்த நவம்பர் 11ம் தேதி நடந்தது. இந்த தேர்வை எழுத 6 லட்சத்து 26 ஆயிரத்து 960 பேர் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, இதற்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது. அதில்  தேர்ச்சி பெற்றவர்கள் சுமார் 15 ஆயிரம் பேர் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். மெயின் தேர்வுக்கான ரிசல்ட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், 2667 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். எங்கள் அகாடமியில் படித்த 300க்கும் மேற்பட்ட  மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு நவம்பர் 6ம் தேதி தொடங்குகிறது. இதில், தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கப்படும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்காக இலவச  மாதிரி தேர்வை நாங்கள் நடத்த உள்ளோம். அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள் இந்த நேர்முக தேர்வை நடத்த உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.Tags : Group 2 , 6 lakh ,applied, Group 2 Main ,Exam Result ,Release
× RELATED விவசாயிகள், மக்களுக்கு உதவி செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும்