×

மோடிக்கு பாக். பாடகி 2வது முறை மிரட்டல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பாடகி ஒருவர், தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி பிரதமர் நரேந்திர மோடிக்கு மிரட்டல் விடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் பாடகி ரபி பிர்ஜடா. இவர் பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்துவதாக வீடியோ ஒன்றை பதிவிட்டு பிரபலமானவர். கடந்த ஆகஸ்டில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த பாடகி ரபி பிர்ஜடா, வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.அதில், 4 மலைப் பாம்புகள் உட்பட எண்ணற்ற பாம்புகள் மற்றும் முதலையுடன் தான் இருப்பது போன்ற வீடியோவை வெளியிட்டிருந்தார். மேலும், பிரதமர் மோடி மீது இவற்றை விட்டு தாக்குதல் நடத்துவேன் என்றும் பதிவிட்டு இருந்தார். இது  மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ரபி பிர்ஜடாவுக்கு எதிராக லாகூர் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்து இருந்தது.

இந்நிலையில், தற்போது மீண்டும் அவர் ஒரு சர்ச்சை பதிவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதில் இடுப்பில் கைகளை வைத்தபடி, உடல் முழுவதும் கடிகாரத்துடன் கூடிய வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டுள்ள புகைப்படத்தை பிர்ஜடா வெளியிட்டுள்ளார். மேலும் இதனுடன், ‘மோடி ஒரு ஹிட்லர், நான் காஷ்மீரின் மகளாக ஆக  விரும்புகிறேன்,’ என்று பதிவிட்டுள்ளார். பாடகி ரபி பிர்ஜடாவின் பதிவிற்கு உடனடியாக பலர் பதிலளித்து உள்ளனர். அதில் ஒருவர், ‘வாவ், பாகிஸ்தானின் கலாச்சார உடையில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்,’ என கூறியிருந்தார்.  மற்றொருவர், ‘இந்த உடையை பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான் கான், உங்கள் நாட்டின் தேசிய உடையாக அறிவிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.


Tags : Modi ,Singer ,Pak ,Modi. Singer , Pak , Modi., intimidation
× RELATED பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது: மகன் சரண் தகவல்