நாசா எடுத்த 2வது புகைப்படத்திலும் விக்ரம் லேண்டர் சிக்கவில்லை

வாஷிங்டன்: சந்திரயான்-2ல் இருந்து அனுப்பப்பட்டு தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நாசா மீண்டும் கைவிரித்துள்ளது. நிலவில் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்- 2 விண்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர், கடந்த மாதம் 7ம் தேதி தரையிறங்கும்போது திடீரென தொடர்பு  துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விக்ரம் லேண்டரை தேட இஸ்ரோவும், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும் பல்வேறு முயற்சிகளை எடுத்தன. இந்நிலையில், லேண்டரின் வாழ்நாளான 14 நாள்கள் கடந்த செப்டம்பர் 21ம் தேதியுடன்  நிறைவடைந்ததால் லேண்டரை கண்டுபிடித்தாலும் செயல்படுவது சிரமம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

  இந்நிலையில், கடந்த செப்டம்பர் 17ம் தேதி நிலவில் சுற்றிவரும் நாசாவின் ஆர்பிட்டர் சில படங்களை எடுத்தது. மாலை நேரத்தில் எடுக்கப்பட்ட அந்த படங்களை ஆய்வு செய்தபோது, அந்த  நிழலில் லேண்டர் மறைந்திருக்கலாம் என  விஞ்ஞானிகள் கருதினர். இதனால், அக்டோபர் 14ம் தேதி நிலவில் வெளிச்சம் அதிகமாக இருக்கும்போது, ஆர்பிட்டர் மூலம் மீண்டும் புகைப்படம் எடுக்கப்படும் என நாசா அறிவித்திருந்தது. அதன்படி, நிலவை சுற்றும் நாசாவின் ஆர்பிட்டர் கடந்த அக்டோபர் 14ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது ெவளியிடப்பட்டுள்ளன. அதில், விக்ரம் லேண்டர் எங்கு இருக்கிறது என்பதற்கான அடையாளம் எதுவும் இடம் பெறவில்லை.  இது தொடர்பாக நாசாவின் நிலவின் மறுமதிப்பீட்டு ஆர்பிட்டர்  (எல்ஆர்ஓ) திட்டத்தின் திட்ட விஞ்ஞானி நோ எட்வர்டு ெபட்ரோ கூறுகையில், ‘‘ஆர்பிட்டர் கடந்த 14ம் ேததி எடுத்த புகைப்படங்களை புகைப்பட கலைஞர்கள் கவனமாக ஆய்வு  செய்தனர். இதிலும், இந்தியாவின் விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிய முடியவில்லை,’’ என்றார்.

Related Stories:

>