×

வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி 6 கோடி மோசடி-தம்பதி கைது

கோவை:கோவை ஹோப்காலேஜ் நகரை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி. வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது குடும்பத்துடன் அந்தமான் தீவுக்கு சுற்றுலா செல்வதற்காக சித்தாபுதூரில் உள்ள தனியார் டிராவல்ஸ் உரிமையாளர்  சுரேஷ்குமாரை கடந்த ஏப்ரல் மாதம் அணுகினார். அப்போது சுரேஷ்குமார், நிகோபர் தீவுக்கு செல்ல ஒரு நபருக்கு ₹40 ஆயிரம் வழங்குமாறு கூறினார். இதை முத்துக்குமாரசாமி நம்பி சுரேஷ்குமாரின் வங்கிக்கணக்குக்கு 2 தவணைகளில் ₹3  லட்சத்து 47 ஆயிரம் பணம் செலுத்தினார்.
அதற்கு பின்னர் பயணச்சீட்டை செப்டம்பர் 21ம் தேதி நேரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு முத்துக்குமாரசாமியிடம் சுரேஷ்குமார் கூறினார். ஆனால், அந்த தேதியில் முத்துக்குமாரசாமி சென்றபோது, அலுவலகம் பூட்டி இருந்தது. அக்கம்பக்கம்  விசாரித்ததில் சுரேஷ்குமார் தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து, கமிஷனர் அலுவலகத்தில் முத்துக்குமாரசாமி உள்பட ஏராளமானோர் புகார் அளித்தனர்.

கமிஷனர் சுமித்சரண் உத்தரவின்படி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில்,   சுரேஷ்குமார்(49), அவருடைய மனைவி மகேஸ்வரி(43) ஆகியோர் 600க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ. 6 கோடிக்கும் மேல் பணம் மோசடி  செய்தது தெரிந்தது. இந்நிலையில் இவர்கள் கோவையில் பதுங்கியிருப்பதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தம்பதியை கைது செய்தனர். பின்னர் ஜே.எம்.-7  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.


Tags : travel agency , Claiming ,tourist abroad, fraudulent, couple arrested
× RELATED டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி மோசடியாக...