×

பிரியங்கா இன்று அமேதி வருகை

அமேதி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று அமேதியில் நடக்கும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம், அமேதி மக்களவை தொகுதியில் மீண்டும் இந்த முறை போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியடைந்தார். இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கடந்த செப்டம்பர் 27ம் தேதி அமேதி சென்றார்.  போலீஸ் காவலின்போது உயிரிழந்ததாக கூறப்பட்ட ராம் அவுதார் குடும்பத்தாரை பிரியங்கா சந்தித்து ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து 2வது முறையாக பிரியங்கா காந்தி இன்று அமேதி வருகின்றார். இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் அனில் சிங் கூறுகையில், கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கட்சி அலுவலகத்தில் இன்று  தொண்டர்களை தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடுகிறார்,” என்றார்.  Tags : Priyanka ,Amethi , Priyanka, visit, Amethi, today
× RELATED பிரியங்கா காந்தி குறித்து அநாகரீகமான...