×

உலக ராணுவ போட்டிகளில் தங்கம் வென்ற ஆனந்தனுக்கு வாசன் வாழ்த்து

சென்னை: சீனாவில் நடந்து வருகிற உலக ராணுவ போட்டிகளில் தமிழக வீரர்,  தங்கம் வென்றிருப்பதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: உலக ராணுவ போட்டிகள் 2019ல் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் பங்கேற்று தங்கம் வென்றிருப்பது பாராட்டுக்குரியது. சீனாவில் நடந்து வரும் 7வது உலக ராணுவ போட்டியில் 140 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் தடகள வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தமிழக வீரர் தஞ்சாவூரை சேர்ந்த ஆனந்தன் குணசேகரன் பங்கேற்று தங்கம் வென்றுள்ளார். அதாவது 100 மீட்டர் ஓட்டத்தில் 12 நொடிகளில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றுள்ளார். இவரது விளையாட்டுக்கு ஊக்கம் அளித்து, பயிற்சி கொடுத்து உறுதுணையாக இருக்கிற பெற்றோருக்கும், பயிற்சியாளருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.


Tags : Vasan ,Anandan ,World Military Championships. Vasan ,World Military Championships , Vasan congratulates Anandan , winning the gold medal,World Military Championships
× RELATED டிசம்பர் இறுதி வரை பள்ளிகளை திறக்க கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்