×

நாங்குநேரியில் வெற்றி உறுதி : கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: தமிழக காங்கிரஸ் சார்பில் சத்தியமூர்த்தி பவனில் நேற்று தீபாவளி கொண்டாடப்பட்டது. இதில், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு, அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு பட்டாசு, இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில், மாநில நிர்வாகிகள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, கீழானூர் ராஜேந்திரன், நாஞ்சில் பிரசாத், மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் ஆரூண், கடல் தமிழ்வாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் நாங்கள் மக்கள் பலத்தை நம்பி போட்டியிட்டோம். கொள்கையும், லட்சியமும் தான் வெற்றி பெறும். நாங்கள் கொள்கை, லட்சியத்துடன் உள்ளதால் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி. தேர்தல் பணியில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பும், பிரசார பணிகளும் மிகவும் சிறப்பாக இருந்தது.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : KS Alagiri Nankaneri ,KS Alagiri , Confirmation of success , Nankaneri,KS Alagiri
× RELATED பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி