×

மநீம புதிய நிர்வாகிகள் நியமனம் : கமல் அறிவிப்பு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் ேபாட்டியிட வேண்டும் என்பதை முன்னிட்டு, கட்சியின் மாநில நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுச்செயலாளர்களாக அருணாசலம், மவுரியா, குமரவேல், சவுரிராஜன், உமாதேவி, மாநில செயலாளர்களாக முரளி அப்பாஸ், சுகாசினி கந்தசாமி, கிருபாகரன், காந்தி கண்ணதாசன், சத்தியமூர்த்தி, மண்டல மாநில செயலாளர்களாக கமீலா நாசர், கோபிநாத், வைத்தீஸ்வரன், தர்மபுரி ராஜசேகர், மயில்சாமி, பொன்குமரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Tags : executives ,Kamal , Kamal announces appointment ,new executives
× RELATED தலித் ஆயர்களை நியமிக்க வலியுறுத்தி பிரசாரம்