×

வாலாஜா அருகே நீர்நிலைகளில் கொட்டப்படும் ரசாயன கழிவுகள்

வாலாஜா : வாலாஜா அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம். விவசாயிகள் கிணற்று நீரை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால், சுற்றுப்பகுதிகளில் உள்ள தோல் ெதாழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் மழைநீரில் அடித்துவரப்பட்டு கிணற்றில் கலப்பதாக அப்பகுதி மக்கள் ராணிப்பேட்டை ஆர்டிஓ இளம்பகவத்திடம் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் வருவாய்த்துறையினர் கடந்த சில நாட்களாக இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த ஒருவர் காஞ்சிபுரம் அருகே ேதால்தொழிற்சாலை நடத்தி வருகிறார். அங்கிருந்து எடுத்துவரப்படும் ரசாயனம் மற்றும் ேதால் கழிவுகளை சென்னசமுத்திரம் கிராமத்தில் நீர்நிலை பகுதிகளில் கொட்டுவதாக கூறப்படுகிறது.  

இதனால் நிலத்தடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது தெரியவந்தது. இதுகுறித்து சென்னசமுத்திரம் விஏஓ கமலக்கண்ணன் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாலாஜா போலீசில் நேற்று புகார் அளித்தார். இதற்கிடையே சென்னசமுத்திரம் கிராமத்தில் கொட்டப்பட்ட கழிவுப்பொருட்களை தோல் தொழிற்சாலை நிர்வாகத்தினர் லாரியில் எடுத்து சென்றனர்.

Tags : water bodies ,water storage areas , Chemical waste,Walajah ,Water Storage areas
× RELATED புழல் ஏரியில் நீர் இருப்பு அதிகம்...