×

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 39வது தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 39வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்று பதவியேற்ற உள்ளார். மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தேர்தல் முடிந்த நிலையில், பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவிக்கு கங்குலியை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவரே ஒருமனதாக தேர்வாகியுள்ளார். மும்பையில் நடைபெறும் கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு  பொதுக்குழு கூட்டத்தில் அவர் முறையாக பதவியேற்ற இருக்கிறார்.  அவர் பதவியில் இருக்கப் போகும் 10 மாதங்களில், நிர்வாகத்தை சீரமைப்பது, இரட்டை ஆதாய பதவி விவகாரம், முதல் தர கிரிக்கெட்டை செம்மைப்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபடுவார். இதன் மூலம் 33 மாதங்களாக இருந்த நிர்வாக குழுவின் கட்டுப்பாடு முடிவுக்கு வருகிறது. பிசிசிஐயின் செயலாளராக உள்ள உள்துறை அமித்ஷாவின் மகன் ஜெய் ஷாவும், துணை தலைவராக உத்தரகாண்டை சேர்ந்த மஹிம் வர்மாவும் பொறுப்பேற்ற இருக்கிறார்கள்.

பிசிசிஐயின் முன்னாள் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான அனுராக் தாகூரேவின் சகோதரர் அருண் துமல் பொருளாளராகவும், இணை செயலாளராக கேரளாவை சேர்ந்த ஜெயேஷ் ஜார்ஜ் பொறுப்பேற்ற இருக்கின்றனர். முன்னதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அதனை சீரமைப்பதற்காக நீதிபதி லோதா தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றாததால் பிசிசிஐயின் தலைவர் அனுராக் தாகூர் உள்ளிட்டோரின் பதவிகள் பறிக்கப்பட்டன. பிசிசிஐ நிர்வகிக்க உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்ப்படி நிர்வாக குழுவும் அமைக்கப்பட்டது. புதிதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள் பதவியேற்றவுடன் இந்த குழு பதவி விலக வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.


Tags : Sourav Ganguly ,India ,Board of Control for Cricket ,Indian Cricket Board , Sourav Ganguly, Chairperson of the Board of Control for Cricket in India
× RELATED இந்தியாவில் இதுவரை 1,93,58,659 கொரோனா மாதிரிகள் பரிசோதனை.: ஐசிஎம்ஆர் தகவல்