×

தம்பியை மூக்குடைத்த முன்னாள் முதல்வர்: திக்விஜய் சிங்கின் திடுக்'நடவடிக்கை

போபால்: மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங்கின் வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ. தம்பியை கண்டு கொள்ளாமல் அவர் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள ராஜ்கர் மக்களவை தொகுதியில் பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங். இந்த மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சாசோடா தொகுதியின் எம்எல்ஏ.வாக இருக்கும் லட்சுமண் சிங், திக்விஜய் சிங்கின் தம்பியாவார்.

சாசாடோ புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்றும் முதல்வர் கமல்நாத் கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தார். இந்நிலையில், திக்விஜய் சிங்கின் வீட்டின் முன் கூடிய எம்எல்ஏ. லட்சுமண் சிங்கும், அவருடைய ஆதரவாளர்களும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த திக்விஜய் சிங், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தனது தம்பியை கண்டு கொள்ளாமல் வீட்டிற்குள் சென்று விட்டார். தம்பியை அவர் அவமதித்த இச்செயலால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Thambi: Digvijay Singh , Thambi, former chief minister, Digvijay Singh
× RELATED நடமாடும் உணவக வாகனம்: முதல்வர் துவக்கி வைத்தார்