கவர்னருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற 25 விவசாயிகள் கைது

தஞ்சை: தஞ்சைக்கு வந்த தமிழக கவர்னருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற 25 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கஜாபுயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  மின்இணைப்பு வழங்காததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கவர்னருக்கு  கருப்புக்கொடி காட்ட தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் முடிவு  செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று தஞ்சை தமிழ்ப்பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக கவர்னர் பன்வாரிலால் வந்தார். அவருக்கு  கருப்புக்கொடி காட்ட தஞ்சை நாஞ்சிக்கோட்டையில் இருந்து பேரணியாக புறப்பட முயன்ற ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த  விவசாயிகள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். முன்எச்சரிக்கையாக நேற்றுமுன்தினம் இரவு ஒரத்தநாடு டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் தலைமையிலான போலீசார் விவசாய சங்க தலைவர் மணி உட்பட 19 பேரை கைது செய்தனர். கைதானவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Tags : governor , Governor, blacksmith, 25 farmers, arrested
× RELATED தேனி காந்தி நகர் மக்கள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்