×

வார்டு பொறுப்பு குழு உறுப்பினர் பட்டியலை 5ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்: திமுக மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு

சென்னை: வார்டு பொறுப்பு குழு உறுப்பினர் பட்டியலை வரும் 5ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று திமுக மாவட்ட செயலாளர்களுக்கு அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.திமுக பொது செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட றிவிப்பு: நகராட்சி-நகராட்சி-பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில் புதியதாக வார்டுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், திமுக அமைப்பு செயல்பட, ஒவ்வொரு வார்டிற்கு என பத்து பேர் கொண்ட பொறுப்புக்குழு உறுப்பினர்களை, மாவட்ட செயலாளர்கள், அந்தந்த அமைப்புகளுக்குரிய பகுதி, நகர, பேரூர் வட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து “வார்டு பொறுப்புக்குழு உறுப்பினர்கள்” பட்டியலை, வருகிற 5ம் தேதிக்குள் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.Tags : Ward Responsibility Committee ,District Secretaries ,DMK , Ward Responsibility, list, DMK District, Secretaries
× RELATED தனது தலைமையில் வந்த புதிய அமைப்பு...