×

கல்கி ஆசிரமம் மூலம் 800 கோடி வரி ஏய்ப்பு சம்மன் கொடுத்தும் மகன், மருமகள் ஐடி அதிகாரிகள் முன்பு ஆஜராகவில்லை

சென்னை: கல்கி ஆசிரமம் 800 கோடி வரிஏய்ப்பு செய்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியும் கல்கி பகவானின் மகன் மற்றும் மருமகள் நேரில் ஆஜராகவில்லை. எனவே, அவர்களுக்கு மீண்டும் சம்மன்  அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் வரதய்யபாளையத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் கல்கி ஆசிரமம் இயங்கி வருகிறது. கல்கி பகவான் என்னும் விஜயகுமாரை பார்க்க வரும் பக்தர்கள் 50 ஆயிரத்திற்கும் மேல் வரை தட்சணையாக அளிக்க வேண்டும்.  இதற்கு முன்கூட்டியே பணத்தை கட்டி முன்பதிவு ெசய்ய ேவண்டும். வெளிநாட்டு பக்தர்கள் அதிகம் என்பதால் நன்கொடை என்ற பெயரில் பணம் கொட்டியது. இந்த பணத்தை கல்கி பகவான் தனது மகன் கிருஷ்ணா மற்றும் அவரது மருமகள் பிரீத்தா ஆகியோர் ரியல் எஸ்ேடட் என பல தொழில் நிறுவனங்கள் தொடங்கி முதலீடுகள் செய்துள்ளனர். மேலும், கல்கி ஆசிரமத்திற்கு வரும் நன்கொடை  பணத்தை வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அதைதொடர்ந்து கடந்த 16ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் 500 பேர் ஒரே நேரத்தில் தனித்தனி குழுக்களாக பிரிந்து கல்கி ஆசிரமங்களுக்கு  சொந்தமான அலுவலகம் மற்றும் மகன் கிருஷ்ணா நடத்தி வரும் நிறுவனங்கள் தமிழகம்,  கர்நாடகா என நாடு முழுவதும் 40 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.5 நாட்கள் நடந்த தொடர் சோதனையில் கணக்கில் வராத கட்டுக்கட்டாக ₹45 கோடி பணம் மற்றும் ₹20 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் மற்றும் 90 கிலோ தங்கம் ,வைர நகைகள் என மொத்தம் 100 மதிப்புள்ள பணம் மற்றும் ஆபரணங்கள்  பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான மொத்தம் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் சட்ட விரோதமாக வாங்கிய ஆணங்களும் சிக்கியது. இதுதவிர ஆப்பிரிக்கா, துபாய், விர்ஜின் தீவுகளில் 100க்கும் மேல் முதலீடுகள் செய்து இருப்பதற்கான  ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. 40 இடங்களிலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் கணக்காய்வு செய்த போது ₹800 கோடிக்கு மேல் மத்திய அரசுக்கு வரிஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனையின் போது கல்கி பகவான் மகன் கிருஷ்ணா மற்றும் அவரது மருமகள் பிரீத்தா ஆகியோரிடம் விசாரணை நடத்திய போது ஒத்துழைப்பு அளிக்காமல் மவுனமாக இருந்தனர். உடனே வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை  நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அளித்து விட்டு வந்தனர்.ஆனால் கல்கி பகவான் மகன் கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி பிரீத்தா ஆகியோர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகவில்லை. நேற்று விசாரணைக்கு வராதது குறித்து எந்த தகவலும் வருமான வரித்துறைக்கு இருவரும்  தெரிவிக்க வில்லை. எனவே வருமான வரித்துறை சார்பில் விளக்கம் கேட்டு மீண்டும் இருவருக்கும் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான மொத்தம் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் சட்ட  விரோதமாக வாங்கிய ஆணங்களும் சிக்கியது. இதுதவிர ஆப்பிரிக்கா, துபாய், விர்ஜின் தீவுகளில் ₹100க்கும் மேல் முதலீடுகள் செய்து இருப்பதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.


Tags : daughter-in-law ,ashram ,tax evasion ,Kalki ,IT officials ,Samman ,Kalki Ashram Son , 800 crore tax , Kalki Ashram, Samman, appeared
× RELATED புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில்...