×

போனஸ் வழங்காததை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்: தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு

சென்னை: தொமுச உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் பண்டிகை முன்பணம் அறிவிக்கப்பட்டது. அதேபோல் அரசு ஊழியர்களுக்கும் பண்டிகை முன்பணம் அறிவிக்கப்பட்டது. இது அனைத்துத்துறை ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்த சரத்தை அரசோ, போக்குவரத்துக்கழகங்களோ மதிக்கவில்லை.

போக்குவரத்து ஊழியர்கள் தீபாவளிக்கு சிறப்பு இயக்கத்திற்கு செல்வதற்கு முன்பு, போனஸ், அட்வான்ஸ் பணத்தை  ெபற்று குடும்பத்தினர் பண்டிகையை கொண்டாட ஏற்பாடுகள் செய்திட முடியாத நிலையில் மோசமான, மனிதாபிமானமற்ற செயலை அரசும், நிர்வாகங்களும் செய்து வருகின்றன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு தாமதமின்றி  போனஸ், பண்டிகை முன்பணத்தை வழங்க வலியுறுத்தி இன்று (23.10.19) அதிகாலையில் தமிழகம் முழுவதும் அனைத்து பணிமனைகளிலும் பணி துவங்குவதற்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



Tags : Transport workers ,Transport , Transport ,workers ,protest, non-payment , bonuses today
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்