×

டெங்கு காய்ச்சலுக்கு 3,900 பேர் பாதிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: டெங்கு காய்ச்சல் தடுப்பு என்பது நாடு முழுவதுமே சவாலாக உள்ளது. இதுவரை 3900 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். சென்னை ராஜிவ்காந்தி மற்றும் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைகளில்   டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது சவாலாகவே உள்ளது.  

குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் அவர்களுக்கு விடுமுறை அளிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்தாண்டில் இதுவரை 3,900 பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் இறந்துள்ளனர். எழும்பூர் அரசு  குழந்தைகள் நல மருத்துவமனையில் சமீபத்தில் உயிரிழந்த மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு டெங்கு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகளின் ரத்த பரிசோதனை ஆய்வில் உள்ளன என்றார்.

Tags : Minister Vijayabaskar ,Minister , dengue ,fever, Minister Vijayabaskar
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...