அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் நாளை தீபாவளி கொண்டாடுகிறார்

வாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை தீபாவளியை கொண்டாடுகிறார். அமெரிக்காவில் முதல் முறையாக கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய அதிபர் ஒபாமா தீபாவளி கொண்டாடும் நடைமுறையை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அதிபராக பொறுப்பேற்ற டொனல்ட் டிரம்பும் இந்த முறையை பின்பற்றி வருகின்றனர். கடந்த 2017ம் ஆண்டு தனது ஓவல் அலுவலகத்தில் இந்திய அமெரிக்க வம்சாவளி தலைவர்கள் மற்றும் அதிபரின் நிர்வாக உறுப்பினர்களுடன் அதிபர் டிரம்ப் தீபாவளியை கொண்டாடினார்.

கடந்த ஆண்டு ரூஸ்வெல்ட் அறையில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கான கொண்டாட்டம் ஒருவாரம் முன்னதாகவே அமெரிக்காவில் களைகட்டியுள்ளது. வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் மூன்று நாட்கள் முன்னதாகவே தீபாவளியை கொண்டாடுகின்றார். நாளை நடக்கும் தீபம் ஏற்றும் விழாவில் டிரம்ப் பங்கேற்று விளக்கேற்றி வைக்கிறார்.

Related Stories:

>