×

பழநி வனப்பகுதியில் தீபாவளி வேட்டையை தடுக்க தீவிர கண்காணிப்பு

பழநி : தீபாவளியை வேட்டையை தடுக்கும் வகையில் பழநி வனப்பகுதியில் வேட்டை தடுப்பு காவலர்கள் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.பழநி வனச்சரகம் 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இங்கு அளவில் யானை, சிறுத்தை, வரிப்புலி, கரடி, மான், கேளையாடு போன்ற விலங்கினங்கள் அதிகளவு வசித்து வருகின்றன. தவிர சந்தனம், தேக்கு, ஈட்டி போன்ற விலை உயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைகளும் அதிகளவில் உள்ளன.


இதனால் பழநி வனப்பகுதியில் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பண்டிகை தினங்களில் வேட்டை செல்வது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இதனை தடுக்கும் வகையில் பழநி வனத்துறை சார்பில் சிறப்பு ரோந்துப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, திருவிழாக்கால வேட்டைகளை தடுக்க பழநி வனப்பகுதியில் தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வேட்டையை தடுக்க வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளடக்கிய சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் வனப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பழநி வனச்சரகம் 11 தொகுதிகளாக பிரிக்கப்பட்டு, தொகுதி 4 வனஅலுவலர்கள் மூலம் சுழற்சி அடிப்படையில் தொடர் ரோந்துப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. வேட்டைக்கு செல்பவர்கள் மீது சிறை தண்டனை, அபாரதம் போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினர்.

Tags : Prevent Diwali Hunting ,Palani Forest The Forest Department ,area ,Palani , Forest Department,high Alert,palani ,surveillance,Deepavali
× RELATED கோவை மாநகராட்சியில் தனிமை நிலையை...