×

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் கல்கி சாமியாரின் மகன், மருமகள் ஆஜர்

சென்னை: கல்கி சாமியாரின் மகன் கிருஷ்ணா மற்றும் மருமகள் ப்ரீதா இருவரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளனர். கல்கி ஆசிரமத்தில் கடந்த 5 நாட்களாக நடந்த வருமான வரிசோதனை நேற்று நிறைவு பெற்றது. அதில், கல்கி ஆசிரமத்தில் இருந்து ரூ.44 கோடி அளவில் இந்திய பணமும், சுமார் ரூ.20 கோடி ருத்ரோபை அளவிற்கு வெளிநாட்டு பணமும் குவியல், குவியலாக தங்க நகைகள், வைர கற்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ஆந்திர மாநிலம் வரதய்யபாளையத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் கல்கி ஆசிரமம் இயங்கி வருகிறது. அங்கு சட்டவிரோதமாக சொத்து சேர்ந்து வைத்துள்ளதாக இவர்கள் மீது குற்றசாட்டு எழுந்ததையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கடத்த 5 நாட்களாக சோதனையில் ஈடுபட்டனர். கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் என சுமார் 40 இடங்களில் சோதனை நடைபெற்றது. அதில், கல்கி ஆசிரமங்கள் சார்பில் இதுவரை மத்திய  அரசுக்கு ₹800 கோடிக்கு மேல் வரிஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டும்மல்லாது 4,000 ஏக்கர் அளவிற்கு தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் நிலம் வாங்கியது தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. மேலும் கல்கி சாமியாரின் மகன் மற்றும் அவரது மனைவி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. கல்கி சாமியாரின் மகன் மற்றும் மருமகள் பெயரில் தான் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் சட்ட விரோத பண பரிவர்த்தனைகள் அதிகமாக நடைபெற்றிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரிக்க இருவருக்கும் நேற்று சம்மன் அனுப்பப்பட்டது. அப்போது, இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராக வேண்டும் என மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் இருவரும் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர். இவர்களிடம் ரியல் எஸ்டேட் தொடர்பாக 4,000 ஏக்கர் நிலம் வாங்கியது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : daughter-in-law ,Chennai Income Tax ,Income Tax Office Son ,Chennai ,Kalki Samyar ,Kalki Chamiyar , Kalki Ashram, Kalki Samayar, Son, Daughter, Azar, Income Tax Office, Inquiry
× RELATED நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பு அலுவலர் நியமனம்