×

அடுத்தாண்டு முதல் சபரிமலை சீசனில் குமரி கடற்கரையோரம் தற்காலிக கடைகள் வைக்க தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

குமரி: கன்னியாகுமரியில் சபரிமலை சீசனையொட்டி கடற்கரையோரங்களில் கடைகள் வைக்க அடுத்த ஆண்டு முதல் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவில், மத்திய அரசு கடற்கரையோரங்களில் எவ்விதமான வணிக நோக்கிலான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் கன்னியாகுமரி காந்திமண்டபம் முதல் சூர்ய அஸ்தமனத்தை பார்வையிடும் இடம் வரை சமரிமலை சீசன் காலத்தை முன்னிட்டு கடற்கரையோரம் தற்காலிகமாக 250 கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த கடைகளில் தமிழக கலாச்சாரம் சார்ந்த உற்பத்தி பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை முழுமையாக தடை செய்யப்படுகிறது எனவும் உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பாக, கன்னியாகுமரியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட் கிளையில்  பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கடற்கரையோரங்களில் எந்தவிதமான வணிக நோக்கிலான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், சபரிமலை சீசனை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரையோரங்களில் தற்காலிக கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக கடைகளால் உருவாகும் பாலிஸ்டிக் குப்பைகள் அப்படியே கடலில் கலந்து சூழலுக்கு கேடு விளைவிக்கின்றன. எனவே, இந்த தற்காலிக கடைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த ஆண்டு தற்காலிக கடைகளுக்கு 23 வகையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் கடைகள் ஒதுக்கீட்டில் எவ்விதமான அரசியல் தலையீடும் இல்லாமல் பொது ஏலமுடன் ஒதுக்கீடு செய்யவேண்டும் என உத்தரவிட்டனர். அதேபோல, கடை ஒதுக்கீட்டில் உள்ளூர் நபர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். கடைகள் 8 அடி நீளம் மற்றும் 6 அடி அகலத்தில் அமைக்கப்பட வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள்  முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். எனவே, அடுத்த ஆண்டு முதல் சபரிமலை சீசனையொட்டி குமரி மாவட்ட கடற்கரையோரம் தற்காலிக கடைகளை நடத்த தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : shops ,season ,Kumari ,coast ,Sabarimala ,beach , Kanyakumari, Temporary Store, Prohibition, Sabarimala Season, High Court Madurai Branch, HC Branch
× RELATED 17வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை மறுநாள்...