×

உலகின் மிகப்பெரிய ஹோட்டல்

நன்றி குங்குமம் முத்தாரம்

மலேசியாவின் அடையாளமாகவே மாறிவிட்டது ஃபர்ஸ்ட் வேர்ல்டு ஹோட்டல். 28 மாடிகளில் 3,164 தரமான அறைகள், 2,922 டீலக்ஸ் அறைகள், 649 டிரிப்பிள் டீலக்ஸ் அறைகள், 480 சுப்பீரியர் டீலக்ஸ் அறைகள், 136 வேர்ல்டு கிளப் அறைகள் என மொத்தமாக 7,351 அறைகளால் மிளிர்கிறது இந்த ஹோட்டல்.

அறைகளின் எண்ணிக்கைக்காகவே உலகின் மிகப்பெரிய ஹோட்டல் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துவிட்டது ஃபர்ஸ்ட் வேர்ல்டு. இதுவரைக்கும் இந்த ஹோட்டலில் சுமார் 3.5 கோடிப் பேர் தங்கியிருக்கின்றனர்.

Tags : hotel ,world , Malaysia, Largest, First World, Hotel
× RELATED இளம்பெண் பணி நீக்கம் செய்யப்பட்ட...