×

புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை.. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்.. மாநில அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாளான 28ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 9ம் தேதி வேலை நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம்,  பி மற்றும் சி குரூப் ஊழியர்களுக்கு ரூ. 6,908 தீபாவளி போனஸாக வழங்கப்படும் என்றும் புதுச்சேரி அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தினக்கூலி ஊழியர்களுக்கு ரூ.1,184 தீபாவளி போனஸாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி அரசு பிறப்பித்துள்ள அரசாணை:தீபாவளி பண்டிகையான வருகிற 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தங்களது சொந்த ஊருக்குச் சென்று மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாக 28ம் தேதி திங்கள்கிழமை அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை  அளிக்குமாறு பலதரப்பில் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன.

இந்த கோரிக்கைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து, தீபாவளிக்கு அடுத்த நாள் 28ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்தும், அந்த  விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 9ம் தேதி(சனிக்கிழமை) பணி நாளாக அறிவித்தும் ஆணை வெளியிடப்படுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Tags : servants ,Deepavali , Puducherry, Diwali, Holidays, Public Servants, Diwali, Bonuses, Government, Release
× RELATED 1.73 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை...