7 பேர் விடுதலையில் ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் அரசுக்கு வரவில்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: 7 பேர் விடுதலையில் ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் அரசுக்கு வரவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை மையத்தில், அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் பயிற்சி திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்; ஆளுநரை தமிழக அரசு வற்புறுத்த முடியாது; ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் மனு நிராகரிக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகையில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அரசுக்கு வரவில்லை.

தமிழ்நாட்டில், தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் தான் என்றும், இந்தியை திணிக்க கூடாது. கூட்டாட்சி தத்துவத்தில் மொழி திணிப்பு இருக்க கூடாது என, பிரதமரிடம் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருப்பதாகவும் கூறினார். பூரண மதுவிலக்கு என்ற கொள்கையில் ஆளும் அதிமுக அரசு உறுதியாக இருப்பதாகவும், மதுக்கடைகளை ஒரே நாளில் மூடினால், கள்ளச்சாராயம் மீண்டும் உருவாகும் என்பதால், படிப்படியாக மதுக்கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Related Stories:

>