×

ஓய்வூதியதாரர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு : ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படுகிறது

சென்னை:  தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தொடர்ந்து அரசு ஓய்வூதியதாரர்களுக்கும்  அகவிலைப்படியை 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு அரசாணை


மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போல் எங்களுக்கும் அகவிலைப்படி வழங்க வேண்டும் என்று  தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அகவிலைப்படியை 5 சதவீதம் உயர்த்தி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்  ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கீடு


தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் வெளியிட்ட  அறிக்கை: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கியதன் அடிப்படையில் ஓய்வூதியதார்களுக்கும் அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படியை 1-7-2019 முதல் கணக்கிட்டு கூடுதல் ஊதியமாக 5 சதவீதம் வழங்கப்படும். அதன்படி, தற்போதுள்ள 12 சதவீத அகவிலைப்படி 17 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். ஜூலை முதல் செப்டம்பர் மாதத்திலான 3 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு தீர்வு சேவை (வங்கி) மூலம் வழங்கப்படும். இதன் மூலம் 6 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள்

Tags : pensioners , Government of Tamil Nadu, Government, Finance Department, Pensioners
× RELATED தங்கம் சவரனுக்கு 56 அதிகரிப்பு