உயர்நீதிமன்றத்தில் கமாண்டோ ஒத்திகை

சென்னை: சென்னை, உயர்நீதிமன்றத்தில் தமிழக கமாண்டோ படை மற்றும் என்எஸ்ஜியை சேர்ந்த 270 பேர் நேற்று கூட்டு ஒத்திகையில் ஈடுபட்டனர். சென்னை, உயர்நீதிமன்றத்திற்கு சில நாட்களுக்கு முன்பு வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தீவிரவாதிகளால் அசாம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கும் வகையில் நேற்று ஒத்திகை நடைபெற்றது. இதில் தமிழக காமண்டோ படையை சேர்ந்த 200 பேரும், என்எஸ்ஜியை சேர்ந்த 70 பேரும் என 270 பேர் இந்த கூட்டு ஒத்திகையில் ஈடுபட்டனர். இந்த ஒத்திகை நள்ளிரவு 3 மணி வரை நடைபெற்றது. இதில் கையெறி குண்டுகள், துப்பாக்கி தாக்குதல்களை கையாளும் வகையில் ஒத்திகை பார்க்கப்பட்டது.

Related Stories:

>