நடுக்கடலில் மீனவர் மாயம்

காசிமேடு: ராயபுரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் (42) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், கொண்டலு (31) தலைமையில் 7 பேர், கடந்த 19ம் தேதி, காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா அருகே நேற்று முன்தினம் இரவு இவர்கள் மீன் பிடித்துவிட்டு, படகில் தூங்கினர். நேற்று காலை மீனவர்கள் எழுந்து பார்த்தபோது, ஆந்திர மாநிலம், பிரகாசம் ஜில்லா, சீராள தாலுகாவை சேர்ந்த மஸ்தான் (50) என்பவர் படகில் இருந்து மாயமானது தெரிந்தது. இந்நிலையில், மற்ற மீனவர்கள் நேற்று காசிமேடு கடற்கரைக்கு திரும்பினர். பின்னர், இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இந்திய கடலோர காவல் படையினர், மஸ்தானை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர், தூங்கும் போது கடலில் தவறி விழுந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>