×

திருமணம் செய்து வைக்காததால் தாயை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

சென்னை: சென்னை அரும்பாக்கம், துரைசாமி காலனி மாங்காளி நகரை சேர்ந்தவர் அமர்நாத் பிராசாத். தாய் மற்றும் பாட்டியுடன் வசித்து வந்தார். இவரது தம்பி திருமணமாகி பக்கத்து தெருவில் வசித்து வருகிறார். அமர்நாத் தினமும் குடித்து விட்டு, தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தாயிடம் சண்டை போட்டு வந்துள்ளார். கடந்த 1.5.2016 அன்று, அமர்நாத் பிரசாத் வழக்கம்போல் தனது தாயிடம் மீண்டும் சண்டை போட்டுள்ளார். இதனால் பதற்மான பாட்டி ருக்குமணி, பக்கத்து தெருவில் வசிக்கும் மற்றொரு பேரனிடம் இகுறித்து தெரிவித்துள்ளார். அதன்படி தம்பி அங்கு வந்தபோது, ‘நீ இறந்தால் தான் எனக்கு கல்யாணம் நடக்கும்,’ என்று கூறியபடி அமர்நாத் பிரசாத் தனது தாயை கத்தியால் குத்தி கொன்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அமர்நாத் பிரசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் லேகா ஆஜராகி வாதிட்டார். பின்னர் இந்த வழக்கில் நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், அமர்நாத் பிரசாத் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. என்று கூறி உத்தரவிட்டார். இதனையடுத்து அமர்நாத் பிரசாத் சிறையில் அடைக்கப்பட்டார்.



Tags : Marriage, murder of mother, son, life imprisonment
× RELATED குண்டாஸ் முடிந்து வெளியே வந்த ஒரு...