சில்லி பாயின்ட்...

* இங்கிலாந்தில் நடைபெற உள்ள ‘100 பந்து’ கிரிக்கெட் போட்டித் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் முன்னணி வீரர்கள் கிறிஸ் கேல், லசித் மலிங்கா, காகிசோ ரபாடா ஆகியோரை ஏலம் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

* வங்கதேச கிரிக்கெட் வாரியத்துடன் மோதல் காரணமாக அந்நாட்டு வீரர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்

அறிவித்துள்ளனர். தங்களின் 11 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை எந்த வகையான கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுவதில்லை என்ற அவர்களது முடிவால், வங்கதேச அணியின் இந்திய சுற்றுப்பயணம் கேள்விக்குறியாகி உள்ளது.

* கிரெம்ளின் கோப்பை மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற சுவிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக் உலக தரவரிசையில் 7வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். ஆஷ்லி பார்து (ஆஸி.), கரோலினா பிளிஸ்கோவா (செக்.), நவோமி ஒசாகா (ஜப்பான்) முதல் 3 இடங்களில் உள்ளனர்.

Related Stories:

More
>