×

தீபாவளிக்கு அடுத்த நாள் திங்கள்கிழமை விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தீபாவளிக்கு அடுத்த நாள் திங்கள்கிழமை விடுமுறை என்று தமிழக அரசு அரசாரணை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை:தீபாவளி பண்டிகையான வருகிற 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தங்களது சொந்த ஊருக்குச் சென்று மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாக 28ம் தேதி திங்கள்கிழமை அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை  அளிக்குமாறு பலதரப்பில் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன.

இந்த கோரிக்கைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து, தீபாவளிக்கு அடுத்த நாள் 28ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்தும், அந்த  விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 9ம் தேதி(சனிக்கிழமை) பணி நாளாக அறிவித்தும் ஆணை வெளியிடப்படுகிறது. அரசு அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கருவூலம், சார்நிலைக் கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட தகுந்த ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட கலெக்டர்கள் கேட்டுக்  கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Diwali ,government ,Tamil Nadu ,government announcement , Monday ,next day , Diwali,Tamil Nadu
× RELATED விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை...