×

தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியீடு: மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி...மகிழ்ச்சியில் தொண்டர்கள்

மும்பை: மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைக்கும் என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. அரியானா மாநில சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் நவம்பர் 2-ம் தேதியுடன்  முடிவடைகிறது. அதே வேளையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவை பதவிக்காலம் நவம்பர் 9-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி இன்று இடைத்தேர்தல்  வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதன்படி, மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கும், அரியானாவில் 90 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மிக மந்தமாகவே நடைபெற்றது. மாலை 6 மணி நிலவரப்படி, மகாராஷ்டிராவில் 60.25 விழுக்காடு வாக்குகளும்,  அரியானாவில் 65 விழுக்காடு வாக்குகளும் பதிவாகின. காலை 7 மணிக்கு துவங்கி அமைதியாக, வன்முறை ஏதும் இல்லாமல் நடைபெற்ற வாக்குப்பதிவு  6 மணியுடன் நிறைவடைந்தது. இரு மாநிலங்களிலும் காங்கிரஸ்-பாஜக இடையே நேரடி  போட்டி உள்ளதாலும், லோக்சபாவிற்கு பிறகு நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் என்பதாலும் முக்கியமானதாக இவ்விரு சட்டசபை தேர்தல்களும் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தேர்தல் பிந்தைய பல்வேறு டி.வி மற்றும் பத்திரிகைகளின் கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. அதில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணியே அமோகமாக வெற்றி பெற்று மீண்டும்  ஆட்சியை பிடிக்கிறது. அரியானாவிலும் பாஜக ஆட்சியை மீண்டும் தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டுடே கருத்துக்கணிப்பு:

ஆக்ஸிஸ் மை இந்தியா, இந்தியா டுடே இணைந்து நடத்திய கருத்து கணிப்பில், மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா, கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக 166 முதல் - 194  தொகுகளையும், காங்கிரஸ் 72 முதல் 90 தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல், அரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்க இருப்பதாகவும் இந்தியா டுடே கூறியுள்ளது.

ரிபப்ளிக் டி.வி கருத்துக்கணிப்பு:

ரிபப்ளிக் டி.வி. நடத்திய கருத்துக்கணிப்பில் , மகாராஷ்டிரா , அரியானாவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில், பாஜக 135 லிருந்து 142 தொகுதிகளையும் சிவசேனா 81 லிருந்து 88 தொகுதிகளை  பிடிக்கும், காங்கிரஸ் 20 லிருந்து 24 தொகுதிகளையும் தேசியவாத காங்கிரஸ் 30 லிருந்த 35 தொகுதிகளையும், மற்றவை 8 லிருந்து 12 தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல், அரியானாவில் ,பாஜக 52 லிருந்த 63 தொகுதிகளையும், காங்கிரஸ் 15 லிருந்து 19 தொகுதிகளையும், லோக்தள் 1 தொகுதியிலும், மக்கள் ஜனநாயக கட்சி 5 லிருந்து 9 தொகுதிகளிலும், மற்றவை 7 லிருந்து 9 தொகுதிகளை கைப்பற்றும்  என கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு:

மகாராஷ்டிராவில் பாஜக 230 தொகுதிகளையும், காங்கிரஸ் 48 தொகுதிகளையும் கைபற்றும், மற்றவை 10 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.அரியானாவில் பாஜக 71 தொகுதிகளிலும், காங்கிரஸ் 11 தொகுதிகளிலும்  மற்றவை 2 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.

நியூஸ்எக்ஸ் கருத்துக்கணிப்பு:

மகாராஷ்டிராவில் பாஜக 144 லிருந்து 150 தொகுதிகளையும் சிவசேனா 44 லிருந்து 50 தொகுதிகளை கைபற்றும் என்றும் காங்கிரஸ் 40 லிருந்து 50 தொகுதிகளையும் தேசியவாத காங்கிரஸ் 34 லிருந்து 39 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என  கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Tags : Haryana ,BJP ,Maharashtra ,Volunteers , Post-Election Polls: BJP Reigns in Maharashtra and Haryana
× RELATED ஹரியானாவில் இருந்து பாஜக கொடி, தாமரை...