×

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் தாக்குதல்: இன்று பல வீடுகள் சேதம்

ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில், வீடுகள் பல சேதமடைந்துள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டன. நேற்று எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு, தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம், பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்று, அவர்களது பதுங்கு குழிகளை அழித்தது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 6 முதல் 9 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் படையினரின் பதுங்கு குழிகள் சேதம் அடைந்தன.

இந்தநிலையில், குப்வாரா மாவட்டத்துக்கு உட்பட்ட தங்தார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பகுதி வீடுகள் பல இடிந்து சேதமடைந்தன.  பசு தொழுவத்தின் மீது குண்டு விழுந்ததால், 6 கால்நடைகள் பலியாயின. இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், பொதுமக்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணி நடந்தது. பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியை யொட்டி ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மற்றும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.

Tags : Kashmir ,Pakistan Army ,houses ,ceasefire , Ceasefire Agreement, Pakistan Army, Kashmir, Attack
× RELATED ஜம்மு-காஷ்மீர் த்ரால் அருகே சைமோ...