×

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்

வேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் சரக்கு வாகனம் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஜலகாம்பாறை அருகே ஆட்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயம் அடைந்த 16 பேர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் சிகிச்சை பலனின்றி சின்னப்பிள்ளை(60) என்பவர் உயிரிழந்தார்.


Tags : Vellore district ,cargo crashes ,Vellore , Vellore, Thiruppathur, freight vehicle, accident, one killed, 15 injured
× RELATED வேலூர் மாவட்டத்தில் தங்கு தடையின்றி...