×

எகிப்தின் லக்சர் நகரில் 3,000 வருடங்களுக்குப் பழமையான மரத்திலான மம்மி வடிவிலான 30 சவப் பெட்டிகள் கண்டுபிடிப்பு

எகிப்து: எகிப்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், எகிப்தின் லக்சர் நகரில் 3,000 வருடங்களுக்குப் பழமையான மரத்திலான மம்மி வடிவிலான 30 சவப் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சவப்பெட்டிகள் கொள்ளையடிக்கப்படும் என்ற காரணத்தால் பாதிரியார் ஒருவரால் மறைத்து வைக்கப்பட்டன.

கண்டெடுக்கப்பட்ட சவப்பெட்டிகளில் 23 ஆண்களுக்காகவும், 5 பெண்களுக்காகவும், 2 சிறுவர்களுக்காகவும் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த மம்மி வடிவிலான சவப்பெட்டிகளில் கைகள் மூடப்பட்ட நிலையில் இருக்கும் மம்மிகள் ஆண்களுக்கானது. கைகள் திறந்த நிலையில் இருக்கும் மம்மிகள் பெண்களுக்கானது. மேலும் சவப்பெட்டிகள் மீது பல வண்ணங்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன என்று தெரிவித்துள்ளனர். தொல் பொருள் ஆராய்ச்சியில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட முக்கியக் கண்டுபிடிப்பு இதுவென்று எகிப்தின் தொல்பொருள் ஆராய்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

Tags : Luxor ,Egypt , Egypt, Luxor, 3,000 years old, mummy, 30 coffins, discovery
× RELATED கந்தகக்கல்: நீதிபதிகளின் ஆகாய வர்ண ரத்தினம்