×

இந்தியாவில் அதிகரிக்கும் தற்கொலைகள்!

நன்றி குங்குமம் முத்தாரம்

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 10-ம் தேதி உலக மனநல அமைப்பு  மூலம் உலக மனநல நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் உலகம் முழுவதும் இருக்கும் மன நலம் சார்ந்த முக்கிய பிரச்னைகள் தீவிரமாக அலசப்பட்டது.இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மனநல நிபுணர்கள் கலந்துகொண்டனர். அந்த கலந்துரையாடலில் தற் கொலை முக்கிய விவாதப் பொருளாக இருந்தது. குறிப்பாக மன நலம் சார்ந்த பிரச்னைகள் காரணமாக தற்கொலைகள் அதிகரித்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

‘‘கவலை, பதற்றம், மனச் சோர்வு போன்ற மன நலப் பிரச்னைகளால் 10 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் அவதிப் படுகின்றனர். அதாவது இந்திய மக்கள் தொகையில் 7.5 சதவீதம் பேர் மனப்பிரச்னைகளில் இருக்கின்றனர்...’’ என்று அதிர்ச்சியளிக்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு.
2020-இல் இந்த எண்ணிக்கை 25 கோடியைத் தாண்டும் என்று பீதியைக் கிளப்புகிறது அந்த ஆய்வு.  தவிர, ஒவ்வொரு வருடமும் மனப்பிரச்னையால் 2.2 லட்சம் இந்தியர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் தற்கொலை அதிகரித்துவிட்டது.

‘‘இன்று வாழ்க்கை எலிப் பந்தயம் போல ஆகிவிட்டது. எல்லோரும் வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர். வெற்றி பெற்றவர்கள் சாதித்ததாக மகிழ்வடைகின்றனர். தோற்றவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர். தவிர, சமூக வலைத்தளங்கள் பல வழிகளில் மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு அடித்தளமிடுகிறது.

குறிப்பாக அடுத்தவர்களுடன் ஒப்பிட்டு நாமும் அவர்களைப் போல இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் தேவையில்லாத பல விஷயங்களில் முயற்சி செய்கின்றனர். இது அவர்களுக்கு மனச்சோர்வு, கவலை, தோல்வி உள்ளிட்ட பல பிரச்னைகளை உண்டாக்குகிறது. நீண்ட நாட் களுக்கு துயரம், கவலையில் மூழ்கிக்கிடப்பவர்கள் உடனடியாக மனநல ஆலோசகரை சந்திப்பது அவசியம். இதற்கு யாரும் வெட்கப்படக்கூடாது...’’ என்கிறார் மனநல ஆலோசகரான டக்கல்.

Tags : Suicides ,India , India, suicides, anxiety, tension, depression
× RELATED ஆன்லைன் விளையாட்டால் அதிகரிக்கும்...