×

மேட்டுப்பாளையம் - உதகை மலை இரயில் போக்குவரத்து மீண்டும் துவக்கம்: சுற்றுலா பயணிகள் உற்சாக பயணம்

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தொடர் மழையால் நிறுத்தப்பட்டிருந்த மலை ரயில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டு மீண்டும் பயணிக்க துவங்கியுள்ளது. கோவை, மேட்டுப்பாளையம் மலை ரயிலானது மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி இயக்கப்பட்டு வருகிறது. உலக புகழ்பெற்ற இந்த மலை ரயிலில் பயணிக்க உள்நாடு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் பரவலாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து மேட்டுப்பாளையம், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் மலை ரயில் பாதையில் பல்வேறு இடங்களில் தண்டவாளங்களில் மண் சரிவு ஏற்பட்டது மட்டுமின்றி, பாறைகள் உருண்டு விழுந்தன.

இதன் காரணமாக மீண்டும் மேட்டுப்பாளையம் வர இயலாமல் உதகையிலேயே ரயிலானது நிறுத்தபட்டது. மேலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 3 நாட்கள் மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான ரயில் சேவை போக்குவரத்து நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் இயற்கை எழிலை காண முடியாமலும், மலைரயிலில் முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமும் அடைந்தனர். இதனையடுத்து ரயில் பாதை சீரமைக்கப்பட்டதால் இன்று முதல் போக்குவரத்து மீண்டும் துவங்கியுள்ளது. இதனால் முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலா பயணிகளும், பள்ளி செல்லும் மாணவ மாணவிகளும் மகிழ்ச்சியுடன் பயணம் செய்கின்றனர்.


Tags : Mettupalayam - Udachayam ,hill railway reopening ,Tourist excitement. Mettupalayam - Udachayam , Mettupalayam, Udhaka, Mountain Train, Transport, Launch, Tourists, Happiness
× RELATED திருப்பத்தூர் மாவட்ட அரசு...