×

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் வரும் நவம்பர் 18-ம் தேதி முதல் டிசம்பர் 13 வரை நடைபெறும் என அறிவிப்பு: மத்திய அமைச்சரவை

டெல்லி: இந்த ஆண்டிற்கான நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் வரும் நவம்பர் மாதம் 18-ம் டிசம்பர் 13 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான தேதி முடிவு செய்யப்பட்டது. மக்களவை, மாநிலங்களவை செயலாளர்களுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18-ம்தேதி தொடங்கும் என தகவல்கள் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18-ம்தேதி தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18-ம்தேதி தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது ஏற்கனவே வெளியாகி இருந்தது. நாடாளுமன்றம் நடைபெறும் தேதிகளை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு கூடி முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இதன் தலைவராக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளார். இதில் குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 18-ம் தேதி தொடங்கி ஒரு மாதத்திற்கு நடத்தலாம் என முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 21-ம்தேதி தொடங்கி ஜனவரி முதல் வாரத்தில் முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிலுவையில் உள்ள பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதை தவிர்த்து, இரண்டு முக்கிய அவசர சட்டங்களை சட்டமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு இந்த கூட்டத் தொடரில் ஈடுபடும் என தெரிகிறது. உள்நாட்டு கம்பெனிகளுக்கான கார்ப்பரேட் வரிக்குறைப்பு, மின்சார சிகரெட் போன்ற பொருட்களுக்கு தடை விதிப்பு ஆகிய 2 அவசர சட்டங்களை மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Announcement ,Winter Session of Parliament ,The Union Cabinet. Announcing Parliament ,Union Cabinet , Announcing Parliament's ,Winter Session Series, Held November ,18th-December 13th, Union Cabinet
× RELATED விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்ததும் ஒரு...