ஈரோடு மாவட்டம் சிவகிரியில் சாமி சிலைகளை மர்மநபர்கள் உடைத்ததால் பரபரப்பு: பதற்றம் காரணமாக போலீஸ் குவிப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரியில் நள்ளிரவில் சாமி சிலைகளை மர்மநபர்கள் உடைத்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. தொப்பபாளையம் என்ற இடத்தில் பதற்றம் காரணமாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காளியண்ணன் கோவிலில் உள்ள சிலைகளை மர்மநபர்கள் உடைத்ததால் பதற்றம் நிலவி வருகிறது. சாமி சிலைகளை சேதப்படுத்திய காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் தொப்பம்பாளையம் அருகே கோவிலில் வைக்கப்பட்டிருந்து சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டு வருகின்றனர். சிவகிரி-கொடுமுடி சாவலையில் 200-க்கும் அதிகமானவர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள் குறத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories:

>