×

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதி, மகாராஷ்டிரா, ஹரியானாவில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்

நெல்லை: விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வன் உள்பட 8 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக வேட்பாளர் உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதே போல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் மகாராஷ்டிரா, ஹரியானாவில் வாக்குப்பதிவு தொடங்கியது. மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளனர். புதுவை காமராஜ் நகர் தொகுதியில் தொகுதியில் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. காமராஜ் நகர் தொகுதியில் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஓட்டுப்பதிவை சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடத்தி முடிக்க அனைத்து தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். காமராஜ் நகர் தொகுதியில் 7 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு உள்ளதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Tags : Voting ,Maharashtra ,Nanguneri ,Vikravandi ,constituency ,Puducherry Kamarajarnagar ,Haryana Voting ,Haryana , Voting ,Vikravandi, Nanguneri, Puducherry Kamarajarnagar constituency, Maharashtra, Haryana
× RELATED அரசியல் பிரமுகர்களுக்கு தகவல்...