×

பல மாத கண்காணிப்புக்கு பின் என்ஐஏ அதிரடி நடவடிக்கை

தேசிய நலன் பாதுகாப்பில் கருத்தில் கொண்டு மத்தியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை எந்த நேரத்தில் எங்கு வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம். தமிழகத்தில் பல  இடங்களில் சோதனைகளை நடத்தி  பின்னர் அவர்கள், தொடர்ந்து கண்காணித்து வந்ததன் பேரிலும், அவர்கள் நடத்திய விசாரணையின் பேரிலும் கிடைத்த தகவலின் அடிப்படையிலும் பல தகவல்கள், ஆதாரங்கள் கிடைத்திருக்கலாம். இப்படி பல இடங்களில் சோதனைகளை மேற்கொள்ளும் ேபாது, நேரம் வீணாகக் கூடாது என்பதற்காக உள்ளூர் போலீசாரிடம் சொல்லி தான் என்ஐ அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் தடாலடியாக வ்ந்து சோதனை மேற்கொள்வதுண்டு. நிலைமையின் முக்கியத்துவத்தை உணர்ந்து,  நேரம், காலத்தை கவனத்தில் கொண்டு அவர்கள் வந்த பிறகு கூட மாநில போலீசாருக்கு தகவல்கள் தெரிவிக்கப்படுவது உண்டு. தற்போது தமிழகத்தில் மட்டும் என்ஐஏ சோதனை நடத்தவில்லை. அவர்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தீவிரவாத அமைப்புகளின் தொடர்புடைய ஆதரவாளர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தினார்கள். தமிழகத்தில் மட்டும் சோதனை செய்கிறது என்று கூறமுடியாது. அவர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் தான் நாடு முழுவதும் சோதனை நடத்தி, தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்து வருகின்றனர்.


ஒவ்வொரு புலனாய்வு ஏஜென்சியும் இது போன்று திடீர், திடீரென குறிப்பிட்ட இடங்களை தேர்வு செய்து, அங்கு தனிக்குழுவுடன் சென்று திடீரென சோதனை நடத்துவது வழக்கம் தான். இப்படி சோதனைகளை மேற்கொள்ள அவர்களுக்கென்று தனியாக அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தமிழகத்தில் சோதனை நடத்தினால் தவறு  எதுவும் கிடையாது. நமது மக்களின் பாதுகாப்பிற்காக தான் இது போன்று அவர்கள் சோதனை செய்கின்றனர். அவர்கள் ெபரும்பாலும் மாநில போலீசாரின் ஒத்துழைப்போடு தான் செய்கின்றனர். தேசிய புலனாய்வு முகமை என்பது, தனி அமைப்பு; அதனால், அவர்களால் தனியாக இயங்க முடியாது. அவர்கள் மாநில நுண்ணறிவு போலீசாருடன் இணைந்து செயல்படுகின்றனர். ஆனால், அது எந்த நேரத்திலும் வெளியில் தெரியாது. மாநில போலீசாரும் வெளியே தகவல்களை பரிமாறிக்கொள்வதில்லை. தமிழகத்தில் கியு பிராஞ்ச் பிரிவு இதுபோன்ற தீவிரவாத அமைப்புகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது. அவர்கள் கண்காணிக்கும் நேரத்தில் கண்காணிப்பார்கள். பல மாதங்கள் கூட கண்காணித்து வருவர். அப்போது தேவையில்லாமல் விசாரணை நடத்த மாட்டார்கள்.

ஆனால், அவர்களுக்கு போதுமான அடிப்படை  ஆதாரங்கள் கிடைத்தபின்னர் களத்தில் முழுமையாக இறங்குவர். விசாரணை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டால் அதற்காக பெரும் திட்டத்தை  தீட்டுவர். அதன்படி, போலீஸ் குழுக்களை தேர்வு செய்து கொள்வர். குறிப்பிட்ட நேரத்தில் கட்டாயம் கைது செய்து விசாரணை நடத்துவார்கள். அவர்கள் சிஐடி போன்று கண்காணிப்பது மட்டும் வேலை அல்ல. களத்தில் இறங்கி செயல்படவும் செய்வார்கள்.  தமிழகத்தில் தீவிரவாத தொடர்புடைய சிலரை என்ஐஏ கைது செய்துள்ளது. இது ெதாடர்பாக பல மாதங்களாக விசாரணை நடந்து வந்தது; பல குழுக்கள் மாநிலத்தில் பல இடங்களில் கண்காணித்து வந்தனர். இப்போது தமிழகத்தில் கியு பிராஞ்சில் மிகவும் திறமையான அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பல ஆண்டுகள் இந்த துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. அப்படி, அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் என்பதால் இன்னும் அவர்களின் நடவடிக்கைகள் வேகமெடுக்கத் தான் செய்யும். எனவே, தமிழகத்தில் இந்த பிரிவுகள் எல்லாம் செயல்படாமல் உள்ளது என்று பொத்தாம் பொதுவாக சொல்லி விட முடியாது.


Tags : NIA , After , several months , calculation, NIA, Action
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை