என்ஐஏ சோதனையில் ஏராளமானோர் கைது தீவிரவாதிகளின் புகலிடமாகிறதா தமிழகம்?

ஈஸ்டர் நாளில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இலங்கையில் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 250க்கும் அதிகமானோர் பலியாயினர். பயங்கரவாதிகளுக்கு தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பலரிடம் தொடர்பு இருப்பதாக உளவுத்துறை தகவல் வந்ததை அடுத்து நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சோதனை நடத்தி பலரை கைது செய்து விசாரித்து வருகிறது. என்ஐஏ நடத்திய சோதனையில் இதுவரை 127 பேர் கைதாகியுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 33 பேர் என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயம். தமிழகத்தின் பல நகரங்களில் அடுத்தடுத்து சோதனை செய்து பலரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதுபோன்ற நிலைமை இதுவரை இருந்ததே இல்லை; தமிழகத்தின் ஆட்சி நிர்வாக குறைபாடு இதற்கு முக்கிய காரணம். தீவிரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறிக்கொண்டிருக்கிறது என்பதற்கான எச்சரிக்கை உணர்வு சற்றும் இல்லாது படுமெத்தனமாக ஆட்சியாளர்கள் உள்ளனர்.

எல்லா துறையிலும் ஊழல் மலிந்து கிடப்பதால் நிர்வாகம் அலங்கோலமாகி கிடக்கிறது. எல்லா மட்டத்திலும் பலவீனமான நிலையில் உள்ள ஆளும்கட்சியால் இதையெல்லாம் தடுத்து நிறுத்த முடியுமா என்பதும் கேள்விக்குறியாகி வருகிறது. நிலைமை இப்படியே போனால் தீவிரவாதிகள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறிவிடும் ஆபத்து இருக்கிறது. இதை கட்டுப்படுத்த என்ன வழிகள் உள்ளன. இதுபற்றி நான்கு ஆளுமைகள் இங்கு அலசுகின்றனர்.


Tags : Tamil Nadu ,home ,NIA raids ,terrorists ,extremists , NIA test, many arrested, extremists, asylum, Tamilnadu?
× RELATED தமிழகம் முழுவதும் ஜெயலலிதா...