×

கர்நாடகா முன்னேற்றம்

பெங்களூரு, எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த கால் இறுதியில் கர்நாடகா - புதுச்சேரி அணிகள் மோதின. டாசில் வென்ற கர்நாடகா முதலில் பந்துவீச, புதுச்சேரி அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 207 ரன் எடுத்தது. அந்த அணி 15.1 ஓவரில் 41 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில்... சாகர் திரிவேதி 54, விக்னேஷ்வரன் மாரிமுத்து 58, பபித் அகமது 37 ரன் எடுத்து கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினர். கர்நாடகா பந்துவீச்சில் பிரவீன் துபே 3, மிதுன், கவுஷிக் தலா 2, பிரசித் கிரிஷ்ணா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய கர்நாடகா 41 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்து எளிதாக வென்றது. கே.எல்.ராகுல் 90 ரன் (112 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), தேவ்தத் படிக்கல் 50 ரன் (54 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தனர். ரோகன் கடம் 50 ரன் (68 பந்து, 3 பவுண்டரி), கேப்டன் மணிஷ் பாண்டே 20 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற கர்நாடகா அரை இறுதிக்கு தகுதி பெற்றது.Tags : Karnataka,Progress
× RELATED ஆஸி. க்கு எதிரான முதல் டி20 போட்டியில்...